கால்நடை குறியீட்டு திட்டத்தில் பங்கேற்ற வேளாண் கல்லூரி மாணவிகள்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பிடாரமங்கலம் கிராமத்தில் கால்நடை குறியீட்டு திட்டத்தில் பங்கேற்ற வேளாண் கல்லூரியின் இறுதியாண்டு மாணவிகள்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தின் வேளாண்மை மற்றும் கால்நடை அறிவியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் நா. வர்ஷா, பா. அபிநயா, பா. பிரீத்தி, ரா. யாழினி, சக்தி. வ. அனுஷியா ஆகியோர் கிராம தங்கள் திட்டத்தின் கீழ் விவசாயிகளுடன் தங்கி நேரடி களப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக துறையூர் அருகே பிடாரமங்கலம் கிராமத்தில்,தொட்டியம் உதவி வேளாண் இயக்குநர் அலுவலகத்தின் வழிகாட்டுதலின் கீழ் கால்நடை குறியீட்டு (Cattle Tagging) திட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வேளாண் மற்றும் கால்நடை தொடர்பான அறிவைப் பெறும் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். கால்நடைகளுக்கான குறியீட்டு நடவடிக்கையின் முக்கியத்துவம், அதன் மூலம் கால்நடைகளின் சுகாதார பராமரிப்பு, தடுப்பூசி பதிவு, இனப்பெருக்கக் கண்காணிப்பு மற்றும் மத்திய-மாநில அரசுத் திட்டங்களை எளிதில் பெறும் வசதிகள் குறித்து அதிகாரிகள் விரிவாக விளக்கமளித்தனர்.