தென்னை டானிக் செயல்விளக்கப் பயிற்சி அளித்த வேளாண் கல்லூரி மாணவிகள்
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டத்திற்குட்பட்ட சித்தமல்லி கிராமத்தில் தென்னை சாகுபடியில் தென்னை டானிக்கின் பயன்பாடுகள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கப் பயிற்சி (Demonstration) அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் RAWE மாணவி ஜெ. சந்தியா, தென்னை டானிக்கின் பயன்பாடுகள், அதன் நன்மைகள் மற்றும் தென்னை மரங்களின் வளர்ச்சியில் அதன் பங்கு குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தார். மேலும், தென்னை மரங்களின் ஊட்டச்சத்து மேலாண்மையில் தென்னை டானிக்கின் முக்கியத்துவம் மற்றும் அதனைப் பரிந்துரைக்கப்பட்ட முறையில் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார்.
இந்தச் செயல்விளக்க நிகழ்வில் RAWE மாணவிகள் கலந்துகொண்டு, தென்னை சாகுபடியில் பின்பற்றப்படும் தொழில்நுட்ப முறைகள் மற்றும் விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்பங்களைச் செயல்விளக்கத்தின் மூலம் எடுத்துரைக்கும் நடைமுறைகள் குறித்து அறிந்துகொண்டனர்.இந்நிகழ்வு விவசாயிகளிடையே தென்னை டானிக் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அறிவியல் சார்ந்த தென்னை சாகுபடி முறைகளை ஊக்குவிக்கும் நோக்கில் அமைந்தது.