அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
திருச்சி, செப். 17 திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு தகவல் தொழில்நுட்ப பிரிவிலிருந்து பூத் பாக கிளை நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையேற்று ஆலோசனை வழங்கினார். இக்கூட்டத்தில் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் பங்கேற்றனர்.