திருச்சி ஏர்போர்ட் ரன்வே விரிவாக்கம் : 90 சதவீதம் நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவு : இயக்குநர் தகவல்

0 398
Stalin trichy visit

திருச்சி, செப்.17  தமிழகத்தின் இரண்டாவது பரபரப்பான சர்வதேச விமான நிலையமான, திருச்சி விமான நிலையத்தின் ஓடுபாதையை விரிவுபடுத்துவதற்கு தேவையான 90 சதவீதம் நிலம் கையகப்படுத்தும் பணியை, இந்திய விமான நிலைய ஆணையம் (ஏ.ஏ.ஐ.,) முடித்துள்ளது – விமான நிலைய இயக்குநர் ஞானேஸ்வர ராவ் பேட்டி.

சர்வதேச விமான நிலையத்தில் பயணியருக்கான வசதியை மேம்படுத்துவதற்காக, பான் இந்தியா யாரி சேவா திவாஸ் திட்டத்தில், செப். 17ல், திருச்சி விமான நிலையத்திற்கு வரும் பயணியருக்கு நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்படும், மரம் நடுதல், வினாடி வினா போட்டி, செல்ஃபி பாயிண்டுடன் கூடிய புகைப்பட சாவடி, ரத்த தான முகாம் மற்றும் இலவச சுகாதார பரிசோதனை ஆகியவை நடத்தப்படும் என்றார்.

மேலும், தமிழகத்தின் இரண்டாவது பரபரப்பான சர்வதேச விமான நிலையமான, திருச்சி விமான நிலையத்தின் ஓடுபாதையை விரிவுபடுத்துவதற்கு தேவையான 90 சதவீதம் நிலம் கையகப்படுத்தும் பணியை, இந்திய விமான நிலைய ஆணையம் (ஏ.ஏ.ஐ.,) முடித்துள்ளது. கையகப்படுத்தப்பட்ட நிலத்தைப் பாதுகாக்க, 9 கி.மீ., நீளத்திற்கு எல்லைச் சுவர் கட்டப்படும். நீர்நிலைகளை உள்ளடக்கிய மீதமுள்ள 35 ஏக்கர் நிலத்தை, மாநில அரசிடமிருந்து கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஓடுபாதை விரிவாக்கத்துக்கு, மொத்தம் 512 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் ஓடுபாதையின் நீளத்தை 8,136 அடியில் இருந்து 12,500 அடியாக அதிகரிக்க வேண்டும். சில நீர்நிலைகள் உள்ள நிலம், இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை. எங்களுக்கு எந்த நிலம் வழங்கப்பட்டதும், வேலி அமைத்தல் மற்றும் எல்லைச் சுவர் கட்டுவதற்கான டெண்டர் வெளியிடப்படும். எல்லைச் சுவருக்கான கட்டுமானப் பணிகள், மூன்று முதல் நான்கு மாதங்களில் முடியும். நீட்டிக்கப்பட்ட ஓடுபாதை வழியாக செல்லும் நீர்ப்பாசன கால்வாயை மறைக்க என்.ஓ.சி., பெறவும், சிறுபாலத்தை உருவாக்கவும், ஏ.ஏ.ஐ., நீர்வளத் துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. திருச்சி என்.ஐ.டி., பாலம் அமைக்கும் திட்டத்திற்கான மண் பரிசோதனையை நடத்தி வருகிறது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

திருச்சியில் இருந்து டெல்லி விமான சேவையையும் இண்டிகோ விமான நிறுவனம் நாளை(17.09.2025) துவக்க உள்ளது. சிங்கப்பூரிலிருந்து திருச்சி வரும் இண்டிகோ விமானம் காலை 6 மணிக்கு புறப்பட்டு 9: 15 மணிக்கு டெல்லி சென்றடையும். அங்கிருந்து பகல் 2:10 மணிக்கு புறப்பட்டு மீண்டும் 5:45 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடையும் என்று விமான நிலைய இயக்குநர்  குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.