லாட்டரி சீட்டு விற்பனை செய்த 4 பேர் கைது
திருச்சி செப் 17- திருச்சி மேலப் புலிவார்டு ஜாபர் ஷா தெரு பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த போது தஞ்சை மாவட்டம் வடக்கு மான்குடி கீழத்தெருவை சேர்ந்த அப்துல் ரகுமான் (வயது 49) என்பவர் லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அப்துல் ரகுமானை கைது செய்து அவரிடமிருந்து லாட்டரி சீட்டு மற்றும் செல்போனை பறிமுதல் செய்துள்ளனர்.
இதே போன்று ஆழ்வார் தோப்பு பள்ளிவாசல் அருகில் லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த அரியமங்கலம் காமராஜர் நகரை சேர்ந்த அக்தர் அலி (வயது 48) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூபாய் 2,700 பணம், செல்போனை பறிமுதல் செய்துள்ளனர்.
இதே போன்று தில்லைநகர் போலீஸ்சரகத்துக்கு உட்பட்ட அண்டகொண்டான் பகுதியில் உள்ள நீர் தேக்க தொட்டி அருகில் லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த தென்னூர் பகுதியை சேர்ந்த சேட்டு (வயது 24) என்பவர் தென்னூர் ஓ பாலாம் அருகில் கஞ்சா விற்றுக் கொண்டு வந்த அப்துல் மஜீத் (வயது 71 ) என்பரையும் போலீசார் கைது செய்து ஜாமனில் விடுதலை செய்தனர்.