கஞ்சா,போதை மாத்திரை விற்றவர் கைது
திருச்சி செப் 17 -திருச்சி பாலக்கரை குட்செட் ரோடு, ஆலம் தெருவை சேர்ந்தவர் தர்மராஜ் இவரது மனைவி தெய்வம் (வயது 32)இவர் பெல்ஸ் மைதானம் அருகில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை செய்து வருவதாக பாலக்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அபிராமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்த பொழுது அங்கு தெய்வம் நின்று கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை செய்த போது போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை செய்ய இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப் பதிந்து தெய்வத்தை கைது செய்து அவரிடமிருந்து 300 கிராம் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.