கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

0 146
Stalin trichy visit

திருச்சி, செப். 23  கோரிக்கைகளை வலியுறுத்தில் திருச்சியில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், திமுக அரசு வாக்குறுதியாக கொடுத்த கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளான அங்கன்வாடி ஊழியர்கள் உதவியாளர்களை முழு நேர அரசு ஊழியர்களாக்கி  26,000 வழங்க வேண்டும், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு முறையான ஓய்வூதியம் ரூபாய் 9000 அகவிலை படியுடன் வழங்க வேண்டும், அங்கன்வாடி ஊழியருக்கு பணிக்கொடையாக ரூபாய் 10 லட்சம் முன் உதவியாளருக்கு ரூபாய் 5 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க திருச்சி மாவட்ட குழுவை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் மல்லிகா பேகம்  முன்னிலை வகித்தார், மாவட்ட பொருளாளர் ராணி
வாழ்த்துரை வழங்கினார், சிஐடியு மாநகர மாவட்ட செயலாளர் ரங்கராஜன்
விளக்க உரை ஆற்றினார், மாவட்ட செயலாளர் சித்ரா
நன்றியுரை கூறினார், மாநில செயற்குழு உறுப்பினர் கலைச்செல்வி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.