கள்ளக்காதல் பிரச்சனையில் பஸ் டிரைவர் கொலை : கள்ளக்காதலி அவரது கணவர் உள்பட இருவர் கைது

0 145
Stalin trichy visit

திருச்சி, செப்.26  திருவெறும்பூர் அருகே கள்ள காதல் பிரச்சனை சம்பந்தமாக பஸ் டிரைவரை கத்தியால் குத்தி கொலை செய்ததாக கள்ளக்காதலி மற்றும் அவரது கணவரையும் திருவெறும்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்

திருவெறும்பூர் அருகே உள்ள அம்பேத்கார் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (50) இவர் தனியார் பஸ்ஸில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த வீரமுத்து ( 52 )இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி (45) இந்த நிலையில் லட்சுமிக்கும் ரமேஷ் குமாருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரமேஷ் குமார் நேற்று இரவு அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே லட்சுமியை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் பற்றி வீரமுத்துவிற்கு தெரிந்ததால் ரமேஷ் குமாருக்கும் வீரமுத்துக்கும் பிரச்சனை ஏற்பட்டதாகவும் .அப்பொழுது அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரமேஷ் குமார் தனது மைத்துனர் தியாகராஜன் மகன் ரோகித் சர்மா என்பவரின் செல்போனை வாங்கிக் கொண்டு ரயில்வே ட்ராக் வழியாக சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரோகித் சர்மா நள்ளிரவு ரயில்வே ட்ராக் பகுதிக்கு சென்று பார்த்த பொழுது ரமேஷ் குமார் வீட்டின் எதிரே உள்ள ரயில்வே ட்ராக் பகுதியில் இடது பக்கவிலா, தலை, கை ஆகியவற்றில் கத்திக்குத்து காயத்துடன் இறந்து கிடந்துள்ளார்.

இது சம்பந்தமாக ரோகித் சர்மா திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் போலீசார் ரமேஷ் குமாரின் உடலை கைப்பற்றி பிரோ பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தலை உள்ளிட்ட மூன்று இடங்களில் காயத்துடன் இருந்த வீரமுத்துவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து லட்சுமி மற்றும் வீரமுத்துவை கைது செய்து விசாரணை செய்து செய்தனர்.

இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.