நத்தர்ஷா பள்ளி வாசல் முன்னாள் அறங்காவலர் வக்பு வாரிய அலுவலகத்தில் மனு

0 227
Stalin trichy visit

திருச்சி, செப்.26  திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசலில் முன்னாள் நிர்வாக அறங்காவலர் தொடர்ந்து தனது பணிகள் மேற்கொள்ள வக்பு வாரியத்தில் மனு அளித்துள்ளனர்.

திருச்சி சிங்காரத்தோப்பில் பகுதியில் உள்ள நத்தர்ஷா பள்ளிவாசலில் புதிய நிர்வாகிகளை வக்பு வாரியத்தால் அறிவிக்கப்பட்டதால் பழைய நிர்வாக அறங்காவலர் வெளியேற வேண்டும் என பள்ளிவாசல் ஜமாதாரர்கள் திருச்சி வக்பு வாரிய அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் நிர்வாக அறங்காவலர் அல்லாபக்ஸ் வழக்கு தொடர்ந்து உள்ளதால் வழக்கு தீர்ப்பு வரும் வரை முன்னாள் நிர்வாகி பணி செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என பள்ளிவாசல் வம்சவலி பங்காளிகள் மற்றும் மஹல்லாவாசிகள் மனு அளித்துள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கலிபா.சையத்கலந்தர்

திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசலில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுத்தாலும் பழைய நிர்வாக அறங்காவலர் அல்லாபக்ஸ் நீதிமன்றம் சென்று தடை உத்தரவை பெற்றுள்ளார்.

மேலும், பொறுப்புகளை சட்டப்படி புதிய நிர்வாகிகள் வந்த பின்பு தான் பொறுப்புக்களை வழங்க வேண்டும் என கூறப்படுகிறது. இதற்காக தற்போது முன்னாள் நிர்வாக அறங்காவலர் அல்லாபக்ஸ் மேல் முறையீடு செய்துள்ளார். எனவே அந்த வழக்கு முடியும் வரை பழைய அறங்காவலரே பணியைத் தொடர வேண்டும் என திருச்சி பாலக்கரையில் உள்ள தமிழ்நாடு வக்பு வாரியம் அலுவலகத்தில் கண்காணிப்பாளரிடம் நாங்கள் மனு கொடுத்துள்ளோம்.
முறைகேடு நடைபெறுவதாக காழ்ப்புணர்ச்சி காரணமாக
சிலர் தெரிவிக்கின்றனர் என கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.