காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் : அதிமுக அறிவிப்பு

0 158
Stalin trichy visit

திருச்சி செப்.26 அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ வை அவதூறாக பேசியதாக கூறி திருச்சி உள்பட தமிழகம் முழுவதும் காங்கிரஸார் எடப்பாடி உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் திருச்சியில் மாவட்ட காங்கிரஸ் அலுவலகமான அருணாச்சல மன்றத்தை இன்று மாலை முற்றுகையிட்டு போராட்டம் நடக்கப் போவதாக திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக அறிவித்துள்ளது. இந்தப் போராட்டம் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும்,முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமையில் நடக்கிறது. இதில் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்கின்றனர். இந்த போராட்ட அறிவிப்பை அடுத்து,திருச்சி அருணாச்சலம் மன்றத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.