காங்கிரஸ் கட்சியினரை கண்டித்து அதிமுகவினர் கொடும்பாவி எரிக்க முயற்சி : 100க்கும் மேற்பட்டோர் கைது
திருச்சி, செப்.26 எடப்பாடி பழனிச்சாமி உருவ பொம்மையை செருப்பால் அடித்த காங்கிரஸ் கட்சியினரை கண்டித்து அதிமுகவினர் கொடும்பாவி எரிக்க முயற்சி – 100க்கும் மேற்பட்டோர் கைது
நீலகிரியில் நடைபெற்ற அதிமுக பரப்புரையில் எடப்பாடி பழனிச்சாமி காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப்பெருந்தகையை தரை குறைவாக பேசியதாக கூறி தமிழக முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் எடப்பாடி பழனிச்சாமி உருவ பொம்மையை விளக்குமாறு, செருப்பால் தாக்கினர்.
இதனை கண்டித்து திருச்சி மாநகர அதிமுகவினர் இன்று திருச்சி மாவட்ட காங்கிரஸ் அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்வதற்காக வந்தனர், அப்போது அவர்களை காவல்துறையினர் தடுத்தனர் இதனை அடுத்து அவர்கள் கையில் வைத்திருந்த செல்வப் பெருந்தகை உருவப்படத்தை விளக்குமாறால் தாக்கி எரிக்க முயன்றனர். அதனை போலீசார் தடுத்து அதிமுகவினரை கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினார்.
அந்த போலீஸ் வாகனம் அருணாச்சலம் மன்றம் வழியாக சென்று அப்பகுதியில் இருந்த திருமண மண்டபத்தில் அதிமுகவினர் தங்க வைக்கப்பட்டனர்.
அதிமுகவினரை அழைத்து சென்ற போலீஸ் வாகனம் அருணாச்சலம் மன்றத்தை கடக்கும் போது வாகனத்தின் உள்ளிருந்த அதிமுகவினர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் செல்வப் பெருந்தகையை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.