தனியார் பல்கலைக்கழக பேருந்து விபத்துக்குள்ளானதில் மாணவ, மாணவிகள் காயம்

0 228
Stalin trichy visit

திருச்சி, செப்.26 தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி பேருந்தில் பிரேக் பிடிக்காததால் விபத்து – 10க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவ ,மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்த கல்லூரியில் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதியில் இருந்து மாணவ மாணவிகள் செல்வதற்கு கல்லூரி மூலமாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மாணவ மாணவிகளை ஏற்றுக்கொண்டு திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக கல்லூரிக்கு சென்ற பேருந்து பிரேக் பிடிக்காததால் சஞ்சீவி நகர் பகுதியில் முன்னாள் சென்ற பேருந்துகள் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கல்லூரி பேருந்தில் பயணம் செய்த பத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் படுகாயங்களுடன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் தனலட்சுமி சீனிவாசன் பேருந்தில் பிரேக் பிடிக்காததால் முன்னே சென்ற பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.