விமான நிலைய ஓடுபாதை விரிவாக்க பணிக்கு நிலமெடுப்பு பணி : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 164
Stalin trichy visit

திருச்சி, செப்.26  திருச்சி விமான நிலைய ஓடுபாதை விரிவாக்க பணிக்காக நடைபெற்று வரும் நிலமெடுப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் திருச்சி விமான நிலைய கூட்டரங்கில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சரவணன் நிலமெடுப்பு பணிகள் நடைபெறும் இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது உதவி ஆட்சியர் (பயிற்சி) சேஷத்ரிமயும் தீபிசானு, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, விமான நிலைய இயக்குநர் ஞானேஸ்வரராவ், வருவாய் கோட்டாட்சியர் அருள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.