செல்வபெருந்தகையை கண்டித்து அதிமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி, செப். 27 திருச்சி மாவட்டம் லால்குடி ரவுண்டானாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தரக்குறைவாக விமர்சனம் செய்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வ பெருந்தகை யை கண்டித்து திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் செல்வமேரி ஜார்ஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் S.M.பாலன், லால்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் சூப்பர் நடேசன் லால்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் அசோகன், புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார், புள்ளம்பாடி வடக்கு ஒன்றிய செயலாளர் அருணகிரி,
லால்குடி நகர செயலாளர் பொன்னி சேகர், மாவட்ட MGR இளைஞரணி செயலாளர் V.D.M.அருண் நேரு, பொதுக்குழு உறுப்பினர் விஜயா, முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் தாமஸ் , துவாக்குடி நகராட்சி கவுன்சிலர் சாருமதி மட்டும் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் ஒன்றிய மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.