விஜய் பவுன்சர்கள் கார் விபத்தில் சிக்கியது

0 147
Stalin trichy visit

திருச்சி செப்.27- தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தமிழக முழுவதும் கடந்த 13ஆம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று காலையில் நாமக்கல்லிலும், பிற்பகல் கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியிலும் பிரசாரம் செய்கிறார்.
இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்குதமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வருகை புரிந்தார்.

பின்னர் கார் மூலம் டிவிஎஸ் டோல்கேட், நம்பர் ஒன் டோல்கேட், முசிறி, தொட்டியம் வழியாக நாமக்கல் சென்றார். இந்நிலையில் விஜய் கார் முசிறி அருகே சென்ற பொழுது திடீரென்று விபத்து ஏற்பட்டது விஜய் சென்ற கருப்பு கலர் காருக்கு முன்புறம் ஒரு காரும், பின்புறம் மூன்று கார்களும் தொடர்ந்து சென்றனர்.இதில் 4வது காரில் விஜய்க்கு பாதுகாப்புக்கு செல்லும் பவுன்சர்கள் காரில் சென்றனர்.அப்பொழுது திடீரென்று அவர்கள் சென்ற கார் முன்புறம் சென்ற காரின் மீது மோதியது. இந்த விபத்தில் பவுன்சர்கள் சென்ற காரின் முன் பகுதியில் பலத்த சேதம் அடைந்தது.

இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து சிறிது நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது, இதையடுத்து பவுன்சர்கள் அந்த காரில் இருந்து இறங்கி மற்றொரு காரின் புறப்பட்டு சென்றனர்.இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்துகிறது.

Leave A Reply

Your email address will not be published.