நாய்கள் கடித்து குதறியதில் பசுங்கன்று உயிரிழப்பு
திருச்சி, அக்.2 முசிறியில் பிறந்து ஒரு நாளான பசுங்கன்று குட்டியை 10 நாய்கள் கடித்து குதறியதில் உயிரிழப்பு, பலமுறை முசிறி நகராட்சி நிர்வாகத்திடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது பொதுமக்கள் குற்றச்சாட்டு..
திருச்சி மாவட்டம், முசிறி நகராட்சிக்குட்பட்ட அந்தரப்பட்டி நான்காவது வார்டு பகுதிகளான ராஜாஜி நகர் பகுதியில் மனோகர் ஆறு கறவை பசு மாடுகளையும் ஒரு கன்றுக்கட்டி வைத்து வளர்த்து குடும்பம் நடத்தி வருகிறார், நேற்று ஒரு கறவை பசு மாடு கன்று குட்டி போட்டுள்ளது, அந்த கன்று குட்டியை அப்பகுதியில் உள்ள சுமார் 10 ற்கும் மேற்பட்ட தெரு நாய்கள் இரவோடு இரவாக பசுங்கன்று குட்டியை கடித்து குதறிவிட்டது, இதில் கன்று குட்டி உயிரிழந்தது.
இன்று காலை பார்த்த பொழுது கன்று கூடிய சுற்றி 10க்கு மேற்பட்ட நாய்கள் நின்றதால் பெருத்த அச்சம் அடைந்துள்ளனர், தொடர்ந்து இப்பகுதியில் அதிகளவு நாய்கள் இருப்பதாக முசிறி நகராட்சியிடம் அப்பகுதி மக்கள் பலமுறை தெரிவித்தும் இன்றுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குற்றச்சாட்டாக உள்ள நிலையில் அப்பகுதி மக்கள் சாலையில் சென்றாலே நாய்கள் துரத்துவதாகவும், பள்ளி மாணவ, மாணவிகளையும் கடிக்க முயற்சி செய்வதாகவும், வேலைக்குச் செல்லும் பெண்களையும் கடிப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
மேலும் பல்வேறு நிலைகளில் பொதுமக்கள் மற்றும் விலங்குகள் கால்நடைகள் பாதிப்பு ஏற்படாத வகையில் முசிறி நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் பாதிக்கப்பட்டோர் கோரிக்கை வைத்துள்ளனர், தொடர்ந்து இதே நிலை நீடித்தால் அப்பகுதிகளில் பல்வேறு நபர் நாய் கடியால் பாதிக்கப்படுவார்கள் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.