அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நிறைவு நாள்

0 274
Stalin trichy visit

திருச்சி, அக்.2 திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே வெங்கடாசலபுரம் கிராமத்தில் புள்ளம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நிறைவு நாள் விழா இன்று பள்ளியின் தலைமையாசிரியர் முனைவர் மா.சரவணவேல் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் பள்ளியின் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர் R. புவனேஸ்வரி வரவேற்றார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் C.N. சந்திரபிரகாஷ் 7 நாள் சிறப்பு முகாம் அறிக்கையை வாசித்தார். பள்ளியின் PTA தலைவர் பாஸ்கர், ஊராட்சி செயலாளர் கலிய மூர்த்தி , SMC உறுப்பினர்கள் ஹென்றி பிரபாகரன், ஜெகதீஸ்வரி, அகல்யா, சரிதா மற்றும் முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் ஜெனீபர் ஜெனீவா ஹென்றி பிரபாகர், வெங்கடாசலபுரம்ஊராட்சியின் வாசுகி, சூரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் முன்னாள் மாணவர் மன்ற பொருளாளர் K.தெய்கசிகாமணி (மேனாள் இலந்தைக்கூடம் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமையரியர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் (பொ) அரியலூர் )அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
பள்ளியில் பட்டதாரி அறிவியல் ஆசிரியர் P.விக்டர் ஆரோக்கியதாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நிறைவாக பள்ளியின் உதவித் தலைமையாசிரியர் P. சுமதி நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.