இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
திருச்சி அக் 15- திருச்சி மாவட்டம் தொட்டியம் அலங்கரை கிராம பகுதியை சேர்ந்தவர் சத்தியன்.இவரது மகள் பிரியங்கா (வயது 22) இவர் எம் காம் படித்துள்ளார். தற்சமயம்
பிரியங்கா திருச்சி பீமநகர் பகுதியில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கி இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 14 ந் தேதி பிரியங்கா தனது சகோதர் பிரகதீஸ்வரனுக்கு செல்போனில் பேசி தான் விஷம் குடித்து விட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து பதறி அடித்து ஓடி வந்த பிரகதீஸ்வரன் பிரியங்காவை ஆபத்தான நிலையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பிரியங்காவின் நிலைமை மேலும் மோசமானதை தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பிரியங்கா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
சம்பவம் குறித்து செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரியங்கா விஷம் குடித்ததற்கு என்ன காரணம் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.