மயங்கி விழுந்து ஒருவர் சாவு

0 214
Stalin trichy visit

திருச்சி அக் 18 திருச்சி இபி ரோடு தனியார் ஏடிஎம் சென்டர் அருகில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார்.இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அந்த நபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் பாத்திமா கொடுத்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இறந்து போன ஆண் நபர் பெயர் சந்திரன் (வயது 60) என்பது மட்டும் தெரிய வந்தது. அவர் எந்த ஊரை சேர்ந்தவர்?என்ற விவரம் தெரியவில்லை இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.