மாடியில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் உயிரிழப்பு

0 223
Stalin trichy visit

திருச்சி அக். 18 திருச்சியில் பரிதாபம் கொத்தனார் மாடியில் இருந்து தவறி விழுந்து சாவு போலீசார் விசாரணை

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கனியாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 33) இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். நிலையில் நேற்று இவர் அரியமங்கலம் காமராஜர் நகர் அண்ணா தெரு பகுதியில் உள்ள முகமது ஆரிப் என்பவரது வீட்டில்இரண்டாவது மாடியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.அப்பொழுது திடீரென்று அவருக்கு வலிப்பு ஏற்பட்டு மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இந்த சம்பவத்தில் செந்தில்குமார் தலையில் பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து ஆபத்தான நிலையில் செந்தில்குமார் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த செந்தில்குமார் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.