ஓய்வூதியர்களுக்கென தனியாக முதியோர் இல்லம் தொடங்க வலியுறுத்தல்

0 491
Stalin trichy visit

முசிறியில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் வட்ட தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் திருஞானம், பொருளாளர் செல்வராஜ் ஆகியோர் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினர். அப்போது கூட்டத்தில் இறந்துபோன ஓய்வூதியர்களுக்கு வழங்கும் குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.ஒரு லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் உடனே போட்டுக்கொள்ள வலியுறுத்துவது, முசிறி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, மாவட்டந்தோறும் ஓய்வூதியர்களுக்கு என தனியாக முதியோர் இல்லம் தொடங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. முடிவில் துணைத் தலைவர் ஞானசவுந்தரி நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.