தொட்டியத்தில் நடைபெற்ற மாநில அளவிலான “பென்சாக் சிலாட்” போட்டிகள்

0 172
Stalin trichy visit

திருச்சி, அக். 27 திருச்சி மாவட்டம், தொட்டியம் கொங்குநாடு பொறியியல் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு பென்சாக் சிலாட் சங்கத்தின் சார்பாக மாநில அளவிலான அஸ்மிதா கேலோ இந்தியா போட்டி  சனிக்கிழமை அன்று  துவங்கியது.

முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் போட்டிகளை தொடங்கி வைத்தார், போட்டியில் தமிழகத்தில் உள்ள கடலூர், சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, கரூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 27 மாவட்டங்களில் இருந்து 270 ற்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் வெற்றி பெறும் வீரர்கள் தென்னிந்திய போட்டிக்கு தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட உள்ளனர், டேண்டிங், துஙகள், ரகு, சோலோ, கண்டா உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டி நடுவர்களாக மாநில செயலாளர் மகேஷ் பாபு, மாவட்ட பொறுப்பாளர்கள் செயல்பட்டனர். இது பெண்களுக்கு தற்காப்பு கலையான இந்தோனேசியாவின் பாரம்பரிய தற்காப்பு கலை என்பது குறிப்பிடத்தக்கது, இக்களையே தமிழகத்தைச் சேர்ந்த பெண்களும் சிறுமிகளும் கற்று தேர்ந்துள்ளது விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.