கருகும் இளம் சம்பா பயிர்கள் : விவசாயிகள் வேதனை
திருவெறும்பூர் அக் 29 திருவெறும்பூர் அருகே உள்ள பழங்கனாங் குடியில் நட்டு 20 நாட்கள் ஆன சம்பா நெற்பயிர்கள் கருகிவருவதால் விவசாயிகள் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகின்றனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள பழங்கனான்குடியில் சம்பா ஒரு போக நெற்பயிர் சாகுபடி தொடங்கி தற்பொழுது நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் நடவு செய்து 20 நாட்கள் ஆன நெற்பயிர்கள் முளையிலேயே கருகி வருகிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் வழங்கனான்குடி பகுதியில் நடவு செய்த சம்பா ஒரு போக நெற்பயிர் கருகி வருவதை நேரில்பார்வையிட்டு ஆய்வு செய்து அதனை காப்பதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.