வயல்வெளியில் ஆறடி முதலை : வனத்துறையினர் மீட்டனர்
திருச்சி, அக்.29 பெட்டவாய்த்தலை அருகே பாசன வாய்க்கால் வயல்வெளி பகுதியில் ஆறடி முதலையை கண்டு விவசாயிகள் அலறி ஓட்டம், வனத்துறையினர் பிடித்து காவிரி ஆற்றில் விட்டனர்..
திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை அருகே சங்கிலியாண்டபுரம் சிறுகாடு தோப்பு பகுதியில் உய்யக்கொண்டான் வாய்க்கால் செல்கிறது, இந்த வாய்க்கால் மாயனூர் பகுதியில் இருந்து பிரிந்து இப்பகுதியில் வருவதால் காவேரி ஆற்றில் இருந்து தவறி வந்த சுமார் ஆறு அடி மதிக்கத்தக்க முதலை உய்ய க்கொண்டன் வாய்க்கால் பாசன வாய்க்கால் வழியாக விவசாய வயல் வெளிப்பகுதி எஸ்.புதுக்கோட்டை வெங்கடேசன் விவசாய தோட்டத்து கண்ணாற்றில் முதலை படுத்து கிடந்துள்ளது, இதனைக் கண்டு விவசாயிகள் அலறி அடித்து கிராமத்தில் இருந்த மக்களிடம் தகவலை தெரிவித்தனர். மக்கள் வனத்துறை தகவல் தெரிவித்து நிகழ்விடத்தில் இருந்த 6 அடி நீளமுள்ள முதலையை திருச்சி மாவட்ட வனத்துறையினர் மீட்டு முக்கொம்பு காவிரி ஆற்றில் விட்டனர், கிராமப் பகுதியில் ஆறடி முதலை வயல்வெளி பகுதியில் இருந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.