பட்டதாரி இளம் பெண் திடீர் மாயம்

0 136
Stalin trichy visit

திருச்சி நவ 3 திருச்சி பொன்மலை பகுதியைச் சேர்ந்தவர் சாய்புணிசா (வயது 49 ) இவரது மகள் பி.பி.ஏ பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். நேற்று வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர் ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை அதைத் தொடர்ந்து

பொன்மலை போலீசில் புகார் அளிக்கப்பட்டது அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

என்ஜினீயரிங் கல்லூரி மாணவன் திடீர் மாயம்:

திருச்சி உறையூர் வேட்டும் புலி சந்து பகுதியைச் சேர்ந்தவர் ஜான் பாஷா . இவரது மகன் அனீசூர் ரகுமான் (வயது 22). இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ இறுதி ஆண்டு முடித்தார். ஆனால் 3 பாடங்களில் தோல்வியடைந்து விட்டார்.
பின்னர் வீட்டிலிருந்து அரியர் பேப்பர்களுக்காக படித்துக் கொண்டிருந்தார் அப்போது தாயார் அப்துல் சலீமா மகனை திட்டியதாக கூறப்படுகிறது ஏற்கனவே பாடங்களில் தோல்வி அடைந்ததால் மன உளைச்சலில் இருந்த அனிசூர் ரகுமான் தாய் திட்டியதால் வீட்டிலிருந்து வெளியே சென்றார் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இன்ஜினியரிங் மாணவனை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.