டாப் செங்காட்டுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் இல்லாமல் நோயாளிகள் அவதி

0 93
Stalin trichy visit

திருச்சி, நவ.6  திருச்சி மாவட்டம் பச்சை மலை டாப் செங்காட்டுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் இல்லாமல் நோயாளிகள் அவதி

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட தென்புரநாடு ஊராட்சியில் அமைந்துள்ள டாப் செங்காட்டுப்பட்டி மலை கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையம் மலைப்பகுதியில் உள்ள சுமார் 16 கிராமங்களில் வசிக்கும் 3,000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது.

ஆனால் தற்போது, இந்த சுகாதார நிலையத்தில் பல பிரச்சினைகள் நிலவுகின்றன. குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்கள் தங்கும் பகுதி அருகே சுற்றுச்சுவர் இல்லாததால், வனப்பகுதியிலிருந்து பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அடிக்கடி வளாகத்துக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், மழைக்காலங்களில் வளாகம் முழுவதும் சதுப்பு நீர் தேங்கி, நோயாளிகள் மருத்துவமனைக்குள் செல்ல முடியாத நிலையும் உருவாகியுள்ளது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதோடு, நிலையத்தில் செவிலியர்கள் பணியமர்த்தப்படாமல் இருப்பது நோயாளிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்து தான் மருத்துவரை பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது மலைப்பகுதி என்பதாலும், தொடர்ந்து மழைக்காலம் நிலவுவதாலும், நோய்த்தொற்றுகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதனால், மலைப்பகுதி மக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மலைவாழ் மக்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு உடனடியாக செவிலியர்களை பணியமர்த்தி, சுற்றுச்சுவர் அமைக்கும் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.