வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா : பா.ஜ.க.வினர் கொண்டாட்டம்

0 145
Stalin trichy visit

திருச்சி நவ.7  வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா – திருச்சியில் பாஜக சார்பாக கொண்டாட்டம்.

மன்கி பாத் என்ற பெயரில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் மோடி மக்களுடன் மனம்திறந்து பேசி வருகிறார். இதன் 127-வது உரையை கடந்த அக்30–ஆம் தேதி ஞாயிறன்று வழங்கிய அவர், 1896-ஆம் ஆண்டு ரவீந்திரநாத் தாகூர் முதன்முதலாக இந்தப் அற்புத பாடலைப் பாடிய வரலாற்றையும், நாட்டுப்பற்று உணர்வை எழுப்பும் முக்கியமான ஆயுதமாக இந்தப் பாடல் தொடர்ந்து செயல்பட்டு வருவதையும் பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார். மேலும் வந்தே மாதரம் என்கிற தேசபக்தி மந்திரச் சொல் ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் அளவற்ற உணர்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்துகிறது. இந்தப் பாடல் தலைமுறைகளை இணைத்து, தேசத்தின் ஒற்றுமை ஒருமைப்பாட்டிற்கு வலு சேர்க்கும் விதத்தில் மக்கள் மனதில் அன்பை விதைத்துவரும் தேசிய உணர்வின் குறியீடு என்று  குறிப்பிட்டார்.

மேலும்,140 கோடி இந்தியர்களின் ஒற்றுமைக்கும் ‘வந்தே மாதரம்’ பாடல் ஒருங்கிணைந்த குரலாக ஒலித்து வருகிறது. துன்பங்கள் வந்த தருணங்களில் “‘வந்தே மாதரம்’ என்ற முழக்கம் நம் அனைவரையும் ஒன்றிணைத்து உற்சாகம் தருகிறது. மேலும் வந்தே மாதரம் பாடலை ஒலிப்பவர்களின் மனதில் சக்திமிகு பாரத மாதாவின் பெருமையை , வலிமையை உணர்த்தி சக்தியை அளிக்கும் சிறப்பு கொண்டது என்று பிரதமர்  பேசினார்.

வந்தே மாதரம்’ கொண்டாட்டத்தில் நாம் ஒவ்வொருவரும் நம்முடைய பங்களிப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்ற வேண்டும் . நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இந்த விழாக்களில் பங்கேற்று, வந்தே மாதரத்தின் பாரம்பரியத்தையும், இந்திய உணர்வையும் உயர்த்த பங்களிக்க வேண்டும் என பிரதமர் அழைப்பு விடுத்தார்.

பிரதமரின்  அழைப்பை ஏற்று இந்தியா முழுவதும் பாஜக மட்டுமல்லாமல் பல்வேறு அமைப்பினர் கட்சி சேர்ந்தவர்கள் வந்தே மாதரம் பாடலின் 150 ஆவது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.

அந்த வகையில் திருச்சி மெயின் கார்ட் கேட் அருகே திருச்சி பாஜக சார்பாக வந்தே மாதரம் பாடலை பாடி  கொண்டாடினர். மேலும் வந்தே மாதரம் பாடலை அரசியல், ஜாதி, மதம், இனம் ,மொழிக்கு அப்பாற்பட்டு நமது சுதந்திர இந்தியாவின் பாடலை போற்ற வேண்டும் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் திருச்சி பாஜக மாநகர் மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து மற்றும் மகளிர் அணிகள் முக்கிய நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.