காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
திருச்சி, நவ. 8 திருச்சி காந்தி மார்க் கெட் பகுதியில் உள்ள ரெகுலர் லாரி செட்டு களில் சுமார் 350 சுமை தூக்கும் தொழிலாளர்கள் கடந்த 25 ஆண்டுகளாக வேலை செய்து வருகின் றனர்.
லாரிகளில் வரும் மூட்டைகளை ஏற்றி, இறக்குவது, அதற்குரிய கூலியை பெற்றுக்கொள்வது, சில லாரி செட்டுகளில் லாரி வாடகையில் கமிஷன் வாங்கி கொள்வது நடை முறையில் வருகிறது இருந்து.
இந்நிலையில் உப்பு பாறையில் உள்ள ஒரு லாரி செட்டில் கடந்த 20 ஆண்டுகளாக வேலை செய்து வந்த 12 சுமை தூக்கும் தொழிலாளர் களை. வேலை நீக்கம் செய்யும். திட்டத்தோடு அதன் உரிமையாளர் வேறு ஒரு இடத்தில் பெயரை மாற்றி லாரிகளை அங்கு கொண்டு சென்று குறைந்த கூலிக்கு ஆட்களை வைத்து வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால் கடந்த 75 நாட்களாக 12 சுமைாக்கும் தொழிலாளர்கள் வேலையிழந்திருந்தனர். வருமானம் இல்லாததால் அவர்களின் குடும்பம் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தொழிலாளர் இணை கமிஷனர் விசாரணை நடத்தி 12 தொழிலாளர்களுக்கும் வேலை வழங்க வேண் டும் என எழுத்து பூர்வ மான உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அதன்பின்னர் 25 நாட் களாகியும் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கவில்லை.
எனவே தங்களுக்கு வழங்கக்கோரி சுமை தூக்கும் தொழிலா ளர்கள் லாரி புக்கிங் ஆபீஸ் லோடுமேன் ஜென ரல் ஒர்க்கர்ஸ் யூனியன் மாவட்ட செயலாளர் ராமர் தலைமையில், நேற்று கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்பின்னரும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படாத நிலையில் மகா லெட்சுமி நகரில் போலீஸ் பாதுகாப்புடன் மாற்று தொழிலாளர்களின் மூலம் லாரிகளில் உள்ள லோடு கள் இறக்கப்பட்டது. இதையறிந்த பாதிக் கப்பட்ட தொழிலாளர்கள் நேற்று இரவு காந்திமார்க் கெட் லாரி செட்டுகளுக்கு வந்த லோடுகளை இறக்காமல், திடீர் வேலைநி றுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காந்திசிலை முன்பு ஒன்று திரண்டு கோஷமிட்ட வாறு சுமைதூக்கும் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் திருச்சி உட் பட பல்வேறு மாவட்டங் களில் இருந்து வந்த பொருட்கள் இறக்கப்ப டாமல், லாரிகளிலேயே தேங்கியிருந்தது. அசம்பாவிதம் நிகழாமல்
இருக்க ஏராளமான போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டனர்.
இதற்கிடையில் திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு அளித்த புகாரியின் அடிப்படையில் சிஐடியு மாவட்ட செயலாளர் ராமர்,ஆராநல்லூர் ஆறுமுகம் வடக்கு தாராநல்லூர் தீபக் கார்த்தி பெரியண்ணன் முத்துராமன் ஆகிய ஐந்து பேர் மீது காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர் .