தவறான சிகிச்சையால் பெண் பலி : தனியார் மருத்துவமனை முற்றுகை

0 171
Stalin trichy visit

திருச்சி, நவ.12  திருச்சி மாவட்டம், லால்குடி நகர் பகுதியை சேர்ந்த ஜான்சன் இவரது மனைவி ஜெயராணி ஆவார். இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக குழந்தை இல்லை.. இதனால் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்தனர்.  இந்நிலையில் இந்த ஆண்டு ஜெயராணி கர்ப்பமானார். இதனை தொடர்ந்து திருச்சி மாநகர் புத்தூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். கடந்த 1 ஆம் தேதி மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டார். அப்போது மருத்துவர்கள் ஜெயராணிக்கு நீர் கட்டி உள்ளதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்கள். அதற்கு அவருடைய கணவர் மட்டும் உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளவில்லை என உறவினர்கள் குற்றம் சாட்டினர். பின்பு கடந்த 3 தேதி அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியில் எடுத்தனர்.

அறுவை சிகிச்சை செய்த நாளில் இருந்தே ஜெயராணிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது தொடர்ந்து வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட போது அடிக்கடி ஜெயராணிக்கு மருத்துவர்கள் ஊசி மற்றும் மருந்துகளை தொடர்ந்து வழங்கியுள்ளனர் இதனால் அவர் வயிற்று வலியால் துடித்துள்ளார். நேற்று முன்தினம் ஜெயராணி அவர்களை கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதனால் தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததே ஜெயராணி உயிரிழந்ததற்கு முக்கிய காரணம் என அவரது உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகீட்டு கோஷங்களை எழுப்பினர் இதனால் பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.