தொட்டியம் அருகே சாலையை சீரமைக்க கோரி நாற்று நடும் போராட்டம்

0 137
Stalin trichy visit

திருச்சி, நவ.12  திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியம் மதுரை காளியம்மன் கோவில் முதல் முதல் அரங்கூர் செல்லும் தார்சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டதாக கூறப்படுகிறது, இவ்வழியாக சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள், மாணவ, மாணவிகள், குழந்தைகள், வேலைக்குச் செல்லும் பெண்கள் என ஏராளமானோர் சென்று வருகின்றனர், சாலைகள் பராமரிக்காமல் குண்டும் குழியுமாக உள்ளதால் அவ்வழியாக செல்வோர் பல்வேறு நிலைகளில் பாதிப்பிற்கு உள்ளாவதாகவும், ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு செல்வதும் வழியில் பல்வேறு விதத்தில் நோயாளிகள் பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்,

தமிழக அரசிற்கு மாவட்ட நிர்வாகத்திற்கும் பலமுறை கோரிக்கை வைத்து கண்டு கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி சுமார் 25க்கும் மேற்பட்ட பெண்கள் 10க்கும் மேற்பட்ட ஆண்கள் சாமானிய மக்கள் நலக் கட்சி திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் மலர்மன்னன் தலைமையில் சாலையில் பெண்கள் நாத்து நடும் போராட்டம் நடைபெற்றது, தொடர்ந்து தமிழக அரசிற்கு எதிரான கண்டன முழக்கங்களையும் எழுப்பினர், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர்ந்து பல கட்ட போராட்டங்களில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளனர்,

பழுதடைந்த சாலைகள் குறித்து தொட்டியம் ஊராட்சி ஒன்றிய பொறியாளரிடம்  கேட்ட பொழுது அவர் பணிகள் துவங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ஒரு வாரத்திற்குள் சாலைகள் அமைக்கும் பணி துவங்கும் என கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.