மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி நவ 12-திருச்சி ஏர்போர்ட் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 47) துணிகளுக்கு அயன் ஓடும் வேலை செய்து வருகிறார். மேலும் இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்.
இந்நிலையில் இவருக்கு அடிக்கடி வயிற்று வலி வருமாம். நேற்று துணிகளுக்கு அயன் போட்டுவிட்டு வீட்டுக்கு திரும்பி ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அவர் விரக்தியில் வீட்டில் மின்விசிறி கொக்கியில் தூக்க மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக ஏர்போர்ட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து ஏர்போர்ட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய சேகர் உடலை கைப்பற்றி பிரே பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.