முசிறி ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்டப்பணிகள் : அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

0 164
Stalin trichy visit

திருச்சி, நவ.15  முசிறி அருகே பொன்னாங்கண்ணிபட்டியில் அமைச்சர் கே.என்.நேரு பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த பணிகளை திறந்து வைத்தார்

திருச்சி மாவட்டம், முசிறி அருகே தண்டலைபுத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பொன்னாங்கண்ணிப்பட்டியில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பாக ரூபாய் 100.53 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 8 புதிய பணிகள் திறப்பு விழா மற்றும் ரூபாய் 54.96 லட்சம் மதிப்பீட்டில் 7 புதிய பணிகள் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது,

விழாவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வளங்கள் துறை அமைச்சர் கே என் நேரு பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்தார்,

விழாவில் முசிறி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் முசிறி பகுதிகளுக்கு பல்வேறு திட்ட பணிகளை அமைச்சர் நிறைவேற்றிக் கொடுத்துள்ளார் என புகழாரம்,

திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் பேசுகையில் செயல்படுத்தப்பட்ட திட்டப் பணிகள் குறித்து விளக்க உரையாற்றினார்,

தொடர்ந்து அமைச்சர் நேரு பேசுகையில் முசிறி சட்டமன்ற தொகுதியில் எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் கூறிய அனைத்து கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்றி கொடுத்துள்ளோம் என்றும், இப்பகுதி மக்கள் காவிரி குடிநீர் கேட்டு கோரிக்கை நிறைவேற்றும் விதமாக அனைத்து பகுதிகளுக்கும் 17 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் காவிரி குடிநீர் வழங்கி உள்ளதாகவும், ஒரு சில இடங்களில் சிறிய தவறுகள் நடக்கலாம் எனவும், கொல்லிமலையில் இருந்து வரும் உபரி நீரை ஏரிகளுக்கு கொண்டு வரும் திட்டத்தை அதிமுக ஆட்சியில் நிறைவேற்ற அப்போதைய அமைச்சர் அண்ணாவி முயற்சி மேற்கொண்டார், அந்தத் திட்டத்தை செயல்படுத்து வதற்கான கருத்துரு திட்ட மதிப்பீடு திட்ட அறிக்கை பணிகள் எல்லாம் தயார் செய்யப்பட்டுள்ளது, விரைவில் இப்பகுதிகளில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் நீர் நிரப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், எஸ் ஐ ஆர் திட்டத்தை திமுகவினர் எதிர்த்து வரும் நிலையில்  எஸ்ஐஆர் திட்டத்திற்கு மிகவும் குறைவான நாட்களே உள்ளது, வழங்கப்பட்ட படிவங்களை பூர்த்தி செய்து விரைவாக திருப்பிக் கொடுக்க வேண்டும், அனைவரும் வாக்காளர்களாக சேராவிட்டால் உங்களை யாரும் தேடி வர மாட்டார்கள், கட்டாயமாக அனைவரும் வாக்குகளை சேர்க்க வேண்டும், சேர்க்காவிட்டால் தங்களது பெயர் நீக்கப்பட்டு வாக்களிக்கும் உரிமையை இழந்து விடுவீர்கள் கட்டாயமாக அனைவரும் வாக்குகளை சேர்க்க வேண்டும், அனைவரின் வாக்குகளையும் சேர்த்தால் நல்லாட்சி அமையும் என்றும்  கடந்த உசரி பகுதிகளில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் தண்ணீர் நிரப்ப பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார்,

விழாவில் திருச்சி பயிற்சி ஆட்சியர் கீர்த்தி, மாவட்ட திட்ட அலுவலர் கங்காதரணி, முசிறி சார் ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர்கள் முசிறி காடுவெட்டி தியாகராஜன், மண்ணச்சநல்லூர் கதிரவன், துறையூர் ஸ்டாலின் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்,

விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.