முசிறியில் மாநில அளவிலான மன்ற போட்டிகள் : முதன்மை அலுவலர் தொடங்கி வைத்தார்

0 179
Stalin trichy visit

திருச்சி, நவ.15  தொட்டியம் கொங்கு நாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பள்ளி கல்வித்துறை சார்பாக மாநில அளவிலான மன்ற போட்டிகள் நடைபெற்றது,
மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் கிருஷ்ண பிரியா தொடங்கி வைத்தார்..

திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியம் கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் திருச்சிராப்பள்ளி மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பாக 2025 -26 கல்வி ஆணடிற்கான மன்ற செயல்பாடுகள் சார்ந்த போட்டிகள் இலக்கிய மன்றம் வினாடி வினா மன்றம் மற்றும் சிறார் திரைப்படம் மன்றங்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான போட்டிகள் நடைபெற்றது, போட்டிகளை திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா தொடங்கி வைத்தார், தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு தன்னம்பிக்கை குறித்த பல்வேறு கருத்துகளை கூறினார்,

தொடர்ந்து தமிழ், ஆங்கிலம் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதை போட்டி,
கதை சொல்லுதல், வினாடி வினா, சிறார் திரைப்படம், நடிப்பு ஒளிப்பதிவு, கதை வசனம், உள்ளிட்ட 13 வகையான போட்டிகள் நடைபெற்றது, போட்டிகளில் கலந்துகொள்ளும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும்
சான்றுகள் வழங்கப்படும், இதில் மூன்று வெற்றி பெறும் நபர்களை தேர்வு செய்யப்படுவார்கள்,
மாநில அளவில் 38 மாவட்டங்களைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவ, மாணவிகள் 570 பேர் கலந்து கொண்டுள்ளனர், 13 போட்டிகளில் முதலிடம் பெரும் மாணவ, மாணவிகளை வெளிநாடு கல்வி சுற்றுலா செல்வதற்கு அழைத்துச் செல்லப்படுவதாக கூறப்படுகிறது, போட்டிகளில் கலந்து கொள்ள வந்த மாணவிகளுடன் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.