முசிறி கோட்டத்தில் குற்றங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ஆலோசனைக் கூட்டம்
திருச்சி, நவ. 15 முசிறி கோட்டத்தில் குற்றங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள், இரவு காவலர்கள் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் டி.எஸ்.பி. சுரேஷ் குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், முசிறி தனியார் திருமண மண்டபத்தில் முசிறி கோட்டத்தில் குற்ற நிகழ்வுகளை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது, இரவு காவலர்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் முசிறி
டி எஸ் பி சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது,
டிஎஸ்பி பேபேசுகையில், குற்ற நிகழ்வுகளை தடுக்க அனைவரும் முனைப்புடன் செயல்பட வேண்டும், குற்றச்சம்பவங்களை தடுப்பதற்கு கண்காணிப்பு கேமராக்களின் அவசியம் பற்றி வணிகர்களிடையே எடுத்துக் கூறினார், தற்போது பொது இடங்களில் கேமராக்கள் அதிக அளவில் பொருத்தப்பட்டுள்ளது, தங்கள் கடைகள் மற்றும் அதன் வளாகங்களில் கேமராக்கள் பொருத்துவதின் அவசியம் பற்றியும் எடுத்துக் கூறி கேமராக்கள் பொருத்த கூறினார், வணிகர்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பதாக கூறினர்,
தொடர்ந்து இரவு காவலர்கள் அமைப்பது முதியவர்களை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. காவல் ஆய்வாளர்களும், உதவி ஆய்வாளர்களும் பல்வேறு பாதுகாப்பு குறித்த கருத்துகளை வழங்கினார்கள்,
குற்ற சம்பவங்கள் எவ்வாறு நடந்தேறி வருகிறது என்பது குறித்த வீடியோக்களை செல்போன் மூலம் வணிகர்களிடம் காண்பிக்கப்பட்டது,
இக்கூட்டத்தில் ஏழு காவல் நிலைய ஆய்வாளர்கள் உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் முசிறி சரகத்திற்குட்பட்ட ஏழு காவல் நிலைய பகுதிகளில் உள்ள அனைத்து நகைக்கடை, வங்கி, அடகு கடை, மதுபான கடை உள்ளிட்ட வணிகங்களைச் சேர்ந்தவர்கள் சுமார் 150 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்,