செந்தண்ணீர்புரம் மாநகராட்சி பள்ளியில் குழந்தைகள் தின விழா

0 175
Stalin trichy visit

திருச்சி, நவ.17  திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி பள்ளியில் குழந்தைகள் தின விழாகொண்டாடப்பட்டது.

முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்த நாள் (நவ.14) குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன் ஒருபகுதியாக  திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது. பள்ளியின் தலைமையாசிரியர் எழியரசி தலைமை வகித்து விழாவைத் தொடங்கி வைத்தார்.

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், உரையாடல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஆசிரியர்களும் மாணவர்களும் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மாமன்ற உறுப்பினர் சுரேஷ் கலந்துக் கொண்டு பரிசுகள் வழங்கினார்.

தலைமையாசிரியர் எழியரசி அவர்கள் பேசும்போது, “குழந்தைகள் நாட்டின் எதிர்காலம்; அவர்களின் கல்வி, ஒழுக்கம் மற்றும் நலம் மீது அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறினார். விழாவின் இறுதியில் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.