பிரதமரை விமர்சித்து கேலிச்சித்திரம்: பா.ஜ.க. கண்டனம்

0 135
Stalin trichy visit

திருச்சி, நவ.17  திருச்சியில்பா.ஜ. கட்சியின் ஊடகப் பிரிவு மாநில தலைவர் ரங்க நாயகலு அளித்த பேட்டியில்
பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி அனைவருமே நடுநிலையோடு இருக்க வேண்டும். பத்திரிகை துறையில் பத்தாயிரத்திற்கு மேற்பட்டோர் பணி புரிகின்றனர். வருங்காலங்களில் பாரதிய ஜனதா கட்சி அரசு சார்பில் பத்திரிகையா ளர்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும். இவர்கள் அனைவருக்கும் நலத்திட்டங்கள் செயல்படுத்தும் வாழ்க்கையில் மத்திய அரசு திட்டம் கொண்டு வர உள்ளது.மிக விரைவில் மத்திய இணை அமைச்சர் முருகன் முயற்சியால். பிரதமரை இழிவாக கேலிச்சித்திரம் வரைவது கண்டிக்கத்தக்கது ஆனந்த விகடன் பத்திரிகையில் பிரதமரை விமர்சித்து கேலிச்சித்திரம் வரைந்தது கண்டிக்கிறோம்.

பிரதமர் மற்றும் தேசிய தலைவர்களை இழிவாக சித்தரிப்பது குறைத்துக் கொள்ள வேண்டும். பத்திரிகையாளர்களுக்கும் வரையறை உள்ளது அதை கடந்த செயலாக இருக்கும் பொழுது வருத்தமளிக்கிறது. த.வெ.க. சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருந்தாலும் எந்த ஒரு ஆர்ப்பாட்டத்திலும் கட்சி தலைவர் விஜய் பங்கேற்கவில்லை. உண்மையான வாக்காளர்களின் உரிமையைப் பெற்றுத் தந்தது சிறப்பு திருத்தம் தான். முழுமையாக அதைப்பற்றி தெரியாத கட்சியினர் அதற்கு எதிராக போராட்டம் நடத்துவது கண்டிக்கத்தக்கது. சிறப்பு திருத்தம் பணி முறையாக நடக்க வேண்டும் என்பதற்கு முழு முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.சிறப்பு திருத்தம் பணி என்றாலே திமுகவினர் பயப்படுகின்றனர் இத்தனை காலமும் அவர்கள் இதை சாதகமாக வைத்து தான் வெற்றி பெற்று வந்தனர்.அதனால் சிறப்பு திருத்தம் வாயிலாக வாக்காளர் பட்டியல் தூய்மைப்படுத்தப்படும். இதன்மூலம் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.