முசிறியில் ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்த போராட்டத்தால் பணிகள் பாதிப்பு
திருச்சி, நவ.18 முசிறியில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தால் அனைத்து பணிகளும் பாதிப்பு
திருச்சி மாவட்டம், முசிறியில் ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தாலுகா அலுவலகத்தில் நில அளவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திமுக அரசு தேர்தல் கால வாக்குறுதி 309ன் படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும், மேலும் ஆசிரியர்களுக்கு உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு, ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க கோரியும், அரசாணை எண் 243 ஐஉடனடியாக ரத்து செய்யக் கோரியும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 22 பேரும், முசிறி வட்டாட்சியர் அலுவலகத்தில் நிலஅளவர்கள் 3 பேரும், முசிறி ஒன்றியத்தில் 93 ஆசிரியர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இதனால்ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பணிகளும்,நில அளவை பணிகளும், பள்ளிக்கல்வித்துறையில்ஆசிரியர் பணிகளும் பாதிப்படைந்துள்ளது.