மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் : 3 பேர் மீது வழக்குப்பதிவு

0 101
Stalin trichy visit

திருச்சி, நவ.22  திருச்சி மாவட்டம் மணப்பாறை வையம்பட்டி துவரங்குறிச்சி புத்தாநத்தம் வீரப்பூர் மற்றும் அதனை உள்ளடக்கிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே கனிமவளத் துறையின் அனுமதியின்றி மணல் அள்ளி வரும் கும்பல் கும்பலால் சமூக ஆர்வலர்கள்  மாவட்ட கண்காணிப்பாளருக்கு தொடர்ந்து புகார் வந்தனர். அதன் அடிப்படையில் மணப்பாறை போலீசார் ரோந்து பணியில் இருந்த பொழுது அப்பகுதியில் வந்த லாரியை நிறுத்தி விசாரணை செய்த பொழுது வாகனத்தை பிடித்த போலீசார் அதிலிருந்து நண்பர்கள் இறங்கி ஓடிள்ளனர் பின்னர் மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரியை சோதனை செய்த பொழுது அனுமதி இன்றி ஆற்று மணல் கடத்தியது தெரிய வந்தது டிப்பர் லாரியை கைப்பற்றிய போலீசார் விசாரணையில் இறங்கினர் விசாரணையில் மணப்பாறை அடுத்த வடக்கு சேர்பட்டி பகுதியைச் சேர்ந்த பூமி பாலன் என்பவருக்கு சொந்தமானது என தெரிய வந்தது அவருடன் வந்த இரண்டு நபர்கள் பில்லூர் பகுதியைச் சேர்ந்த கிஷோர் மற்றும் பாலா சமுத்திரத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் ஆகிய மூன்று நபர்களின் மீதும் வழக்கு பதிவு செய்து மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடரும் மணப்பாறை பகுதிகளில் மணல் மாபியா கும்பல் மீது போலீசார் அதிரடி நடவடிக்கையால் மணல் அள்ளும் கும்பல் கலக்கத்தில் ஓட்டம் எடுத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.