கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 6 பேர் கைது
திருச்சி நவ 22- திருவரங்கம் வடக்கு வாசல் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக திருவரங்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்மதியழகன் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது ஒரு வாலிபர் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்தபோது மேலே கொண்டையம்
பேட்டயை சேர்ந்த ரங்கநாதன் (வயது 25) என்பது தெரிய வந்தது இதையடுத்து போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 1.5 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த இரண்டு பேர் கைது
திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட காசிப் பாளையம் மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக காந்தி மார்க்கெட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த வரகனேரி
கல்பாளையத்தை சேர்ந்த காமராஜ் (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 100 கிராம் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இதே போன்று பாலக்கரை போலீசரகத்துக்கு உட்பட்ட ஆலம் தெரு பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த பெல்சி மைதானம் பகுதியை சேர்ந்த ரத்தின சபாபதி (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 100 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர் மேற்கண்ட இரண்டு பேரையும் போலீசார் ஜாமினில் விடுதலை செய்தனர்