பாலக்கரையில் இரண்டு குழந்தைகளின் தாய் மாயம்
திருச்சி நவ 23- திருச்சி பொன்மலை அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் ஜான் பீட்டர் இவரது மனைவி சாந்தா ஷீலா ( வயது 30)இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் கணவரிடம் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக குழந்தைகளை கணவர் வீட்டில் விட்டுவிட்டு சாந்த ஷீலா சகோதரி வீட்டில் தங்கி இருந்தார்.
இந்நிலையில் அங்கு இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அவரது சகோதரி நவநீதா பாலக்கரை போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போனால் சாந்தா ஷீலாவை தேடி வருகின்றனர்.