மணப்பாறை அருகே அனுமதியின்றி மணல் அள்ளியவர் கைது: வாகனம் பறிமுதல்
திருச்சி, டிச.4 மணப்பாறை அருகே அனுமதியின்றி மணல் அள்ளியவர் கைது வாகனமும் பறிமுதல்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வளநாடு அருகே உள்ள களனி வாய்ப்பட்டி கிராமத்தில் உள்ள ஆற்றுப்பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக வளநாடு காவல் துறையினருக்கு
ரகசிய தகவல் கிடைத்தது. தகவலைத் தொடர்ந்து பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் விக்னேஷ் தலைமையிலான காவலர்கள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அனுமதியின்றி டிராக்டரில் மண் அள்ளிக் கொண்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக மணல் அள்ளிக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் மேல தானியத்தைச் சேர்ந்த நல்லுசாமி மகன் ராஜ்குமாரை (29) கைது செய்தனர்.
தொடர்ந்து மணல் அள்ள பயன்படுத்திய டிராக்டர் மற்றும் ஒரு யூனிட் மணலுடன் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டுவந்தனர். மேலும் ராஜ்குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.