முசிறி அருகே சாலையோர புளியமரம் சாய்ந்து பெண் உயிரிழப்பு

0 155
Stalin trichy visit

திருச்சி, டிச.5  முசிறி அருகே அறங்கூரில் சாலையோரம் உள்ள புளியமரம் சாய்ந்து பெண் உயிரிழப்பு, அருகில் இருந்த மின் கம்பமும் சாய்ந்தது, தொட்டியம் போலீசார் விசாரணை.

திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியம் பகுதிகளான வடக்கு அரங்கூரை சேர்ந்தவர் மகாமுனி கூலித்தொழிலாளி, இவரது மனைவி நிர்மலா பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார், வழக்கம்போல் வடக்கு அறங்கூரில் பேருந்து நிறுத்தம் அருகே காய்கறி வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டிற்கு சாப்பிடுவதற்காக சென்றபோது சாலையோரம் இருந்த புளியமரம் அடியோடு சாய்ந்ததில் நிர்மலாவின் மீது விழுந்துள்ளது. அருகில் இருந்த மின் கம்பமும் சாய்ந்தது, இதில் நிர்மலா பலத்த காயமடைந்து மயங்கி விழுந்துள்ளார்.

நிர்மலாவை மீட்டு தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் நிர்மலா உயிரிழந்தார் என மருத்துவர்கள் கூறினர், இச்சம்பவம் குறித்து நிர்மலாவின் கணவர் மகாமுனி தொட்டியம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து நிர்மலாவின் உடலை உடற்கூறாய்விற்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,

நல்வாய்ப்பாக மின்கம்பம் சாய்ந்ததில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, மரம் சாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.