முசிறியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு
திருச்சி, டிச.5 முசிறி கைகாட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி மலர் அஞ்சலி, அன்னதானம் வழங்கினார்.
திருச்சி மாவட்டம், முசிறி கைகாட்டியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9 ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முசிறி நகர அதிமுக செயலாளர் மாணிக்கம் தலைமையில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சரும், திருச்சி வடக்கு மாவட்ட புறநகர் செயலாளர் பரஞ்சோதி மலர் தூவி மரியாதை செலுத்தினார், தொடர்ந்து முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் மற்றும் அதிமுக நகர செயலாளர் மாணிக்கம், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள், தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள், நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.