தா.பேட்டையில் அய்யப்பன் சுவாமி வீதி உலா : பக்தர்கள் பங்கேற்பு
திருச்சி, டிச.6 திருச்சி மாவட்டம், தா.பேட்டையில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு அய்யப்பன் கோயிலில் அய்யப்பன் சுவாமி வீதி உலா உற்சவம் நடைபெற்றது.
தா.பேட்டை பிள்ளாதுறையில் அய்யப்பன் கோயில் அமைந்துள்ளது. கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் மண்டல பூஜை விழா தொடங்கியது. மண்டல பூஜை விழாவை முன்னிட்டு ஐயப்பன் கோயிலில்அய்யப்பனுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகமும் சிறப்பு வழிபாடுகளும் பஜனைகளும் நடைபெற்று வருகிறது. அய்யப்ப பக்தர்கள் தினசரி பஜனையில் அய்யப்பன் பாடல்கள் பாடி வழிபாடு நடத்தி வருகின்றனர்.இதில் சபரிமலைக்கு யாத்திரை செல்ல உள்ள பக்தர்கள் மாலை அணிந்து தினசரி பூஜையில் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் நேற்று அய்யப்பன் வீதி உலா உற்சவத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்
நடைபெற்றது.
அப்போது விவசாயம் செழிக்கவும், உலக நன்மைக்காகவும், மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கவும், தொழில் வளம் மேம்படவும், இயற்கை சீற்றங்களால் உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்கவும் வழிபாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அய்யப்பன் சுவாமி திருஉருவச் சிலை டிராக்டரில் வைக்கபட்டு தா.பேட்டை நகரின் முக்கிய வீதிகள் வழியாக உற்சவம் நடைபெற்றது.
பக்தர்கள் தேங்காய், பழம் படைத்து அய்யப்பனை வழிபட்டனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஐயப்ப குருசாமிகள் கோபால்,சரவணன் நடேசன்,செல்வம்,
வெங்கடேசன் உள்ளிட்டஅய்யப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.
அய்யப்பபக்தர்கள் நிகழ்ச்சியில் திரளாக கலந்து கொண்டனர்.