தொட்டியத்தில் மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டு போட்டிகள் பரிசளிப்பு விழா

0 190
Stalin trichy visit

திருச்சி, டிச.6 திருச்சி மாவட்டம்,  தொட்டியத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவிகளுக்கான 66 – வது குடியரசு தின விளையாட்டு போட்டிகள் பரிசளிப்பு விழா.

தொட்டியம் கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் 17வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான 38 மாவட்டங்களுக்கிடயே 66 ஆவது குடியரசு தின விளையாட்டு போட்டிகள் கபடி, வாலிபால், கோ — கோ, ஹாக்கி, பாஸ்கெட் பால், துரோ பால், ஹேண்ட் பால், பால் பேட்மிண்டன், புட் பால், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் மற்றும் டென்னிஸ் நடைபெற்றது.

பல சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் பாஸ்கெட் பால் பிரிவில் இறுதி போட்டியில் சென்னை சிவசாமி ஐயர் பெண்கள் மேனிலை பள்ளி அணி முதல் இடத்தையும் , கோவை
எஸ் வி ஜி வி மெட்ரிக்குலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல் காரமடை அணி இரண்டாம் இடத்தையும் மற்றும் திருவண்ணாமலை ஸ்ரீ வி டி எஸ் ஜெயின் ஹையர் செகண்டரி ஸ்கூல் காந்தி நகர் அணி மூன்றாவது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றது .

டேபிள் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சென்னை அழகப்பா மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல் புரசைவாக்கம் மாணவி முதல் இடத்தையும் மதுரை அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி ஒத்தக்கடை மாணவி இரண்டாம் இடத்தையும் மற்றும் திருச்சி குட் செப்பர்டு ஹையர் செகண்டரி ஸ்கூல் மாணவி மூன்றாமிடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர். டேபிள் டென்னிஸ் இரட்டையர் பெண்கள் பிரிவில் திண்டுக்கல் என் எஸ் வி வி மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல் பட்டிவீரன் பட்டி மாணவி முதல் இடத்தையும் சென்னை பாத்திமா சாரங்கபாணி ஹையர் செகண்டரி ஸ்கூல் மாணவிகள் இரண்டாம் இடத்தையும் மற்றும் கோயம்புத்தூர் அவிலா கான்வென்ட் மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல் மாணவிகள் மூன்றாம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர். பெண்கள் ஒற்றையர் பூபந்து போட்டியில் காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல் மாணவி முதல் இடத்தையும் சேலம் ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல் மாணவி இரண்டாமிடத்தையும் மற்றும் செங்கல்பட்டு அன்னை வயலட் மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல் மாணவி மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
பெண்கள் இரட்டையர் பிரிவில் திண்டுக்கல் பாரத் வித்யா மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல் மாணவிகள் முதலாமிடத்தையும்
கோயம்பத்தூர் சந்திரா மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல் மாணவிகள் இரண்டாமிடத்தையும் மற்றும் சேலம் கோல்டன் ஸ்பார்க் மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல் மாணவிகள் மூன்றாமிடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர். பெண்களுக்கான குழு பூபந்து போட்டியில் சென்னை சி எஸ் ஐ ஜெசி மோசஸ் மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல் அண்ணா நகர் பெண்கள் அணி முதல் இடத்தையும் ஓசூர் செயிண்ட் போஸ்கோ ஹையர் செகண்டரி ஸ்கூல் கிருஷ்ணகிரி பெண்கள் அணி இரண்டாமிடத்தையும் மற்றும் நாமக்கல் கவெர்ன்மென்ட் மாடல் கேர்ள்ஸ் ஹையர் செகண்டரி ஸ்கூல் குமாரபாளையம் பெண்கள் அணி மூன்றாமிடத்தையும் பிடித்தனர். வாலிபால் போட்டியில் ஈரோடு குமுதா மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல் நம்பியார் முதல் இடத்தையும், சேலம் ஹோலி ஏஞ்ஜல்ஸ் மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல் பேர்லாண்ட்ஸ் இரண்டாம் இடத்தையும் மற்றும் திருப்பூர் வித்யா விகாஷினி மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல் மூன்றாம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர். துரோ பால் போட்டியில் சென்னை வேலம்மாள் ஹையர் செகண்டரி ஸ்கூல் அணி முதல் இடத்தையும், கிருஷ்ணகிரி ஜெயிண்ட் அன்னிஸ் ஹையர் செகண்டரி ஸ்கூல் இரண்டாம் இடத்தையும் மற்றும் கோயம்பத்தூர் ப்ரெசென்டேஷன் கான்வென்ட் கேள்ஸ் ஹையர் செகண்டரி ஸ்கூல் அணி மூன்றாமிடத்தையும் பிடித்து வெற்றி பெற்றது. கோ கோ போட்டியில் சிவகங்கை ஹோலி ஸ்ப்ரிட் மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல் கலையார்கோவில் அணி முதல் இடத்தையும், கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேனிலை பள்ளி அணி இரண்டாம் இடத்தையும் மற்றும் கன்னியாகுமரி ஸ்ரீ கிருஷ்ணா ஹிந்து வித்யாலையா மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல் மூன்றாமிடத்தையும் பிடித்து வெற்றி பெற்றது. கபடி போட்டியில் தென்காசி எஸ் எஸ் வி ஹையர் செகண்டரி ஸ்கூல் மாதாப்பட்டினம் அணி முதல் இடத்தையும், எஸ் டி ஏ டி நாமக்கல் அணி இரண்டாம் இடத்தையும் மற்றும் ராமநாதபுரம் அரசு மேனிலை பள்ளி கடலாடி அணி மூன்றாம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர். புட்பால் போட்டியில் திண்டுக்கல் எஸ் டி ஏ டி அங்குவிளாஸ் ஹையர் செகண்டரி ஸ்கூல் அணி முதல் இடத்தையும், தென்காசி கிராம கமிட்டி ஹையர் செகண்டரி ஸ்கூல் வெங்கடேசவபுரம் அணி இரண்டாம் இடத்தையும் மற்றும் திண்டுக்கல் தேவாங்கர் கேள்ஸ் ஹையர் செகண்டரி ஸ்கூல் மூன்றாமிடத்தையும் பிடித்து வெற்றி பெற்றது. ஹாக்கி போட்டியில் திருவண்ணாமலை ஸ்ரீ வி டி எஸ் ஜெயின் ஹையர் செகண்டரி ஸ்கூல் முதல் இடத்தையும், ஈரோடு கே ஓ எம் அரசு மேனிலை பள்ளி பஞ்சாம்புள்ளிம்பட்டி அணி இரண்டாம் இடத்தையும் மற்றும் தஞ்சாவூர் பி வி செல்வராஜ் கேள்ஸ் ஹையர் செகண்டரி ஸ்கூல் அணி மூன்றாம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழாவிற்கு
கொங்குநாடு கல்வி நிறுவனத்தின் தலைவர் பெரியசாமி வெற்றி பெற்ற விளையாட்டு வீராங்கனைகளை பாராட்டி கேடயம் , கோப்பை மற்றும் சான்றிதழ் வழிங்கினார்.
வெற்றி பெற்ற வீராங்கனைகளை பள்ளிக்கல்வி துறையின் உடற்கல்வி மாநில இயக்குனர் மற்றும் சிஇஓ வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.