மணப்பாறை அருகே கிணற்றில் தவறி விழுந்த மாணவி உயிருடன் மீட்பு

0 292
Stalin trichy visit

திருச்சி, டிச.9  மணப்பாறை அருகே 80 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த 12 ம் வகுப்பு மாணவி
நீந்திக் கொண்டிருந்த மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த தீயணைப்பு துறையினர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆர்எஸ் வையம்பட்டியை சேர்ந்த மாணவி (நாகலெட்சுமி – 17) ஒருவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று மாலை பள்ளி முடித்து விட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றின் அருகே தண்ணீர் தொட்டியில் கை – கால்களை கழுவ சென்ற போது எதிர் பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தார். சுமார் 80 அடி ஆழமுள்ள கிணற்றில் 20 அடி தண்ணீர் இருந்த நிலையில் மாணவி நீந்தியபடி ஒரு இடத்தில் இருந்தார்.

இந்நிலையில் மாணவி தவறி விழுந்ததை பார்த்த அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இருவரும் உடனே கிணற்றில் குதித்து மாணவ பயந்து விடாமல் இருங்க அவருக்கு பாதுகாப்பாய் இருந்தனர். உடனே இதுபற்றிய தகவலை அக்கம் பக்கத்தினர் வையம்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கயிறு கட்டி பள்ளி மாணவியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதே போல் கிணற்றில் இறங்கிய மற்ற இரண்டு வாலிபர்களும் கயிறு மூலம் கிணற்றில் இருந்துமேலே வந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.