ஓய்வூதியத்தை உயர்த்தக் கோரி ஏ.ஐ.டி.யு.சி கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
திருச்சி, டிச.9 ஓய்வூதியத்தை உயர்த்தக் கோரி ஏ.ஐ.டி.யு.சி கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் மாநிலம்தழுவிய ஆர்ப்பாட்டம் திருச்சியில் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு ஏ ஐ டி யு சி கட்டட தொழிலாளர் சங்கம் சார்பில்மாவட்ட தலைவர் முருகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் சுரேஷ்.மாவட்ட செயலாளர் செல்வகுமார்,மாவட்டத் தலைவர் நடராஜா,மாவட்ட பொருளாளர் ராமராஜ்,ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்.
ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கையாக ஓய்வூதியம் 6 ஆயிரம் ரூபாய் என்பதை சட்டமாக்க வேண்டும். உடனடியாக வாரிய முடிவு படி 2000 என்பதை வழங்க வேண்டும், விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் வீடு கொடுக்க வேண்டும்.வீடு கட்டும் மானிய தொகையை 10 லட்சமாக உயர்த்த வேண்டும்,கல்விச் செலவு முழுவதையும் வாரியம் மூலம் வழங்க வேண்டும்.மாவட்டங்களில் நல வாரிய அலுவலகங்களில் ஏஜெண்டுகள் முறைகேடுகளை தடுக்க வேண்டும் கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் ஓய்வூதிய தொகையை மாதம் 1ஆம் தேதி முதல் 10ஆம் தேதிக்குள் வங்கிகளில் செலுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் முடிவில் மாவட்ட துணைச் செயலாளர் மருதாம்பாள் நன்றி கூறினார்.