திருச்சியில் கிறிஸ்துமஸ் பேரணி

0 113
Stalin trichy visit

திருச்சி, டிச.15  ஏசு கிறிஸ்து பிறந்த நாள் கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்தும் விதமாக ஆயிரத்திற்கு மேற்பட்ட கிறிஸ்தவர்கள் ஆடி பாடி வாழ்த்து தெரிவித்து பேரணியாக சென்றனர்.

டிசம்பர் 25 ஆம் தேதி இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை கிறிஸ்துமஸ் என உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சபைகளும் ஒன்றிணைந்து பொதுமக்களுக்கு கிறிஸ்து அன்பை வெளிப்படுத்தும் விதமாக கிறிஸ்மஸ் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் ஆடி பாடி கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பி அணிந்து வந்தனர்.  திருச்சி மத்திய அருகில் உள்ள ஜான் வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் பேரணியை மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் தொடங்கி வைத்தார் பேரணியானது,  மத்திய பேருந்து நிலையம், கண்டோன்மெண்ட் , மாநகராட்சி அலுவலகம், நீதிமன்றம் வழியாக மீண்டும் வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தை வந்து அடைந்தனர்.

பேரணியின்போது கிறிஸ்துவர்கள் பல்வேறு பாடல்களை பாடி ஆடி மகிழ்ந்து சென்றனர்.

இப்பேரணியில் ரெவென்ட் பிரசாத் தேவசித்தம், பேராயர்கள் சவரிராஜ், போதகர்கள் பவுல், ஜான் பீட்டர், மார்ட்டின், குமார், ரெவரெண்ட் மணப்பாறை ரெவரெட் விஜய் சகயராஜ், ரெபரென்ட் ஜெர்ரிடேனியல், சுவிசேஷகர் பொன்.பிரிட்டோ, மற்றும் பேராயர்கள், போதகர்கள் விசுவாசிகள் திரளாக பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.