தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரயிலில் அடிப்பட்டு உயிரிழப்பு

0 170
Stalin trichy visit

திருச்சி, டிச.17 திருச்சி பொன்மலை ரெயில் நிலையத்திற்கும் திருவெறும்பூர் ரெயில் நிலையத்திற்கும் இடையே அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் இன்று காலை 7 மணி அளவில் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.அப்போது அவ்வழியே வந்த ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலின் பேரில் ரெயில்வே எஸ்எஸ்ஐ கோபாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.