திருவெறும்பூர் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

0 187
Stalin trichy visit

திருச்சி, டிச.24  திருவெறும்பூர் அருகே பி.டெக் இரண்டாம் ஆண்டு மாணவி தூக்கிட்டு தற்கொலை இன்ஸ்டா காதல் விவகாரம் காரணமா என போலீசார் விசாரணை

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் நடுத்தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் இவரது மகள் தீப ரோஷினி (19). இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். மேலும் தனது வீட்டில் சிறுவர் சிறுமிகளுக்கு டியூசன் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் தீப ரோஷினி ஒருவரை இன்ஸ்டாகிராமில் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை தீப ரோஷினியின் தாயார் ஜானகி பெல் மருத்துவமனைக்கு சென்று விடுவதாக கூறி சென்றுள்ளார்.

பின்னர் ஜானகி திரும்பி வந்து பார்க்கும் பொழுது வீட்டின் கதவு உள்பக்கம் த தாழிடப்பட்டிருந்தது. அதனால் ஜானகி தனது மகளின் செல் போனுக்கு போன் செய்து பார்த்துள்ளார்.

ஆனால் மகள் போனை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வீட்டின் பின்பக்கம் சென்று ஜன்னல் வழியாக பார்த்த போது தீபரோஷினி தூக்கிட்டு தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று தீபரோஷினியின் உடலை கீழே இறக்கியதோடு இது குறித்து திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீப ரோஷினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீபரோஷினி இன்ஸ்டா காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.